Saturday, December 03, 2011கடந்த வியாழன் பிற்பகல் மட்டக்களப்பு பார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானவர் வடக்குகிழக்கில் கண்ணிவெடி அகற்றும்’ மெக் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின்போது இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போவிற்குச் சொந்தமான பஸ்ஸை செலுத்திவந்த சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வாகன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பார் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது இ.போ.ச பஸ்மோதி மேற்படி முகாமையாளரான மாரிமுத்து ரகுநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தை பலியானார்.
No comments:
Post a Comment