Saturday, December 3, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிதம்பரத்திடம் விசாரிப்பது பற்றி 8-ந்தேதி முடிவு; சி.பி.ஐ. ஐகோர்ட்டு நீதிபதி அறிவிப்பு!

Saturday, December 03, 2011
புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை ப.சிதம்பரமும், ஆ.ராசாவும் சேர்ந்துதான் நிர்ணயம் செய்தனர்.

எனவே 2ஜி ஒதுக்கீடு முறைகேடு குறித்து ப.சிதம்பரத்தை சாட்சியாக அழைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் மனு மீதான தீர்ப்பை 8-ந்தேதி அறிவிப்பதாக சி.பி.ஐ. ஐகோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார்

No comments:

Post a Comment