Saturday, December 03, 2011மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (3.12.2011) மட்டக்களப்பில் நடைபெற்றது.
உலக எயிட்ஸ் தினத்தையொட்டி நாடுபூராவுமுள்ள சிறைச்சாலைகளில் இன்று எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்குகள் என்பன இடம் பெற்றன.
இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் எற்பாடு செய்யப்பட்ட எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு சிறைச்சாலையின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை வரை நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எஸ்.இந்திரகுமார், மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஏ.மோகன், பிரதான நலன்புரி அதிகாரி இ.சிறினிவாசன் உட்பட சிறைக்கைதிகள் கலந்து கொண்டனர்.
இதே வேளை மட்டக்களப்பு சிறைச்சாலையினுள் கருத்தரங்கும் நடைபெற்றது.
மட்டக்களப்பில் விஷேட தேவை உடையோரின் ஊர்வலம்!
சர்வதேச வலது குறைந்தோர் (விஷேட தேவைகள் உடையோர்) தினத்தை முன்னிட்டு இன்று (3.12.2011) காலை மட்டக்களப்பில் விஷேட தேவை உடையோரின் ஊர்வலம் மற்றும் ஒன்று கூடல் என்பன இடம்பெற்றது.
ஹென்டி கப்ட் இன்ரநெசனல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலது குறிந்தோரின் ஊர்வலம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு வில்லியம் மண்டபம் வரை நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பிலுள்ள அரச சார்பற்ற நிறவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வலது குறைந்தோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் வலது குறைந்தோரின் ஒன்று கூடலும் நடைபெற்றது.
No comments:
Post a Comment