Thursday, December 29, 2011

புற்றுநோயை அதிகரிக்கும் கையடக்கத் தொலைபேசிகளின் முறையற்ற பாவனை!

Thursday,December 29, 2011
இலங்கை::முறையற்ற விதத்திலான கையடக்கத் தொலைபேசிப் பாவனை புற்றுநோய் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் சனத்தொகை சுமார் இரண்டு கோடி பேர் ஆயினும், இரண்டு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

கையடக்கத் தொலைபேசியின் மூலம் தினமும் நீண்ட நேரம் கதைப்பதே புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த அமைச்சு, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் பெரும்பாலானவற்றிற்கும் வாகன விபத்துக்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment