Thursday, December 29, 2011

10 மாதம் முன்பு கடத்தப்பட்ட 17 இந்தியர்கள் அடங்கிய சரக்கு கப்பல் விடுவிப்பு!

Thursday,December 29, 2011
கோட்டயம் : கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்ற சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கப்பலில் உள்ள 17 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேரும் ஜனவரி 7ம் தேதி துபாய் வந்து சேர்வார்கள். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சவினா கேலின் என்ற கப்பலை சொக்கோத்ரா தீவு பகுதியில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி கடற் கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

இதில் 17 இந்தியர்கள் உள்ளிட்ட 22 ஊழியர்கள் இருந்தனர். ஊழியர்களையும் கப்பலையும் மீட்க கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து கடந்த 21ம் தேதி விடுவித்தனர். வரும் ஜனவரி 7ம் தேதி இவர்கள் துபாய் வந்து சேருவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment