Thursday, December 8, 2011

அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது தி.மலையில் இன்று மாலை மகாதீபம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

Thursday,December,08,2011
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை கண்டு தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணமலை அண்ணாமலையார் கோயில். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உச்சக்கட்ட தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்க பஞ்ச விளக்கில் இருந்து ஒரே தீபமாக Ôபரணி தீபம்Õ ஏற்றப்பட்டது. இதை ராஜா குருக்கள் பக்தர்களுக்கு காண்பித்தார். அப்போது கடும் குளிரை பொருட்படுத்தாமல் கோயிலிலும், கோயிலுக்கு வெளியிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் Ôஅண்ணாமலையாருக்கு அரோகராÕ, Ôஉண்ணாமுலை அம்மனுக்கு அரோகராÕ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட மகாதீப கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி, 3500 கிலோ நெய் ஆகியவை மலைக்கு எடுத்து செல்லப்பட்டன. இன்று ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் எரியும். மகாதீப தரிசனத்தை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் மற்றும் மலையை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment