Thursday, December 8, 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Thursday,December,08,2011
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்திய மீனவர்களை மீட்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளனர். ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை 10 மணி முதல் மீனவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று, யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மீனவர்களையும், படகுகளையும் கொண்டுவருவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுடைய உத்தரவாதத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து 19 ஆம் தேதிக்குள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வற்புறுத்தினர். 19ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பாம்பன் பாலத்தை முற்றுகையிடுவோம். மீனவர்கள் விடுதலை ஆகும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment