Saturday, December 3, 2011

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Saturday, December 03, 2011
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு சிரேஸ்ட நீதிமன்ற நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி, நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முயற்சித்தனர். அத்துடன் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றைப் படம் எடுத்து சர்வதேச சமூகத்துக்கு அனுப்பவிருந்தனர்.

இதன்மூலம், இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்தனர் என்று பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் இந்த முயற்சியை தடுக்க தேடுதல் நடத்தியபோது சிறைக்குள் இருந்து 19 கையடக்க தொலைபேசிகள், அதற்கான மின்னேற்றிகள், இரும்புக்கம்பிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாத தடுப்புபிரிவினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்தே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment