Saturday, December 10, 2011

யாழ்ப்பாணத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது!

Saturday, December 10, 2011
இலங்கை::யாழ்ப்பாணத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை லலித் குமார வீரராஜ் என்பவர் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருடைய நண்பர் ஒருவரான குகன் முருகானந்தன் என்பவருடன் மோட்டார் வண்டியில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த ஒரு ஊடகவியலாளர் மாநாட்டிற்கான ஆயுத்தங்களை மேற்கொள்ளவென சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற இருவர் பற்றியும் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ´ஜன அரகலய´ என்ற அமைப்பின் தேசிய அமைப்பாளருமாகிய அஜித் குமார தெரிவித்துள்ளார்.

இன்று காலை ´ஜன அரகலய´ என்ற அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்த இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வீரராஜ், 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோர் தொடர்பில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது தாக்கப்பட்டதுடன், இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் எதுவித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment