Saturday, December 10, 2011இலங்கை::புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி போராளிகள் 108 பேர் நாளை யாழில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.இவர்கள் அனைவரையும் மீண்டும் சமூகத்தோடு அவர்களை இணைக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைக்கான அடிக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முன்னாள் புலி போராளிகள் 108 பேரும் குடும்பங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் மீண்டும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment