Saturday, December 10, 2011ராமேஸ்வரம்:: 11 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து
போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மீனவர்களை மீட்பதாகவும், அவர்களின் வழக்கு செலவுகளை ஏற்பதாகவும், தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் தமிழக
அரசின் கடும் எதிர்ப்பை எதிர்த்து மீன்பிடி எல்லை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தையும், கடலோர காவல்படை திரும்ப பெற்றது. இதனையடுத்து
தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
No comments:
Post a Comment