Sunday, December 04, 2011மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் போது, அந்த அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் திரும்ப பெறப்படாத வகையில் அமைந்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழு அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மூன்று வைக்கப்பட்ட மூன்று யோசனைகள், சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஆகிய 5 அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தற்போதை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த மாதம் 6, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment