Sunday, December 4, 2011

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை-அமெரிக்கா அறிவித்துள்ளது!

Sunday, December 04, 2011
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கத் தூதரக அதிகாரி நடத்திய சந்திப்பின் போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

எனினும், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என அமெரிக்க அறிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பு சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும், அவை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும் அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment