Sunday, December 04, 2011முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் கருத்துக்களை அமெரிக்கா முழுமையாக நம்பவில்லை என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா தொடர்பில் மங்கள வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
சரத் பொன்சேகா தொடர்பில் மங்கள சமரவீர வெளியிட்ட சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றே கருதுகின்றோம் என அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாசிற்கும், மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பான தகவல்கள் இவ்வாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணம் மற்றும் தந்திரோபயங்கள் பற்றி மிகவும் துல்லியமான அறிவினை மங்கள கொண்டிருப்பதாக புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு மங்கள ஆதரவளிப்பதனை, ஆபத்தாகவே ஆளும் கட்சி கருதுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவினை இழந்து வருவதாகவும், சரத் பொன்சேகாவிற்கு சிறுபான்மை மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும் புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்றன தொடர்பிலும் சரத் பொன்சேகா தரப்பினர் உறுதி மொழிகளை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: கொலம்போ ரெலிகிராப்
No comments:
Post a Comment