Monday, December 26, 2011

கிறிஸ்துமஸ் விடுமுறை களைகட்டியது மெரினா!

Monday,December,26,2011
சென்னை : கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை சாந்தோம் சர்ச், லஸ் சர்ச் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்கள், பேராலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை திருப்பலிகளில் பங்கேற்ற பொதுமக்கள், அங்கிருந்து கடற்கரையை நோக்கி சென்றனர்.

ஏற்கனவே வெளியூர் சுற்றுலா பயணிகள், மேல் மருவத்தூர் மற்றும் ஐயப்ப பக்தர்களால் கடற்கரை நிறைந்திருந்தது. திருப்பலி முடிந்து வந்த பொதுமக்களும் சேர்ந்து கொண்டதால் கடற்கரையெங்கும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. சிறுவர்களின் உற்சாக குரல்கள், வியாபாரிகளின் விற்பனை குரல்கள் என்று நேற்று காலை முதலே மெரினா கடற்கரை பரபரப்பாக இருந்தது.

No comments:

Post a Comment