Monday, December 26, 2011

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க அரசு உறுதியுடன் செயற்படுகின்றது: இந்திய மீனவரின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை:கடற்சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே!

Monday,December,26,2011

இலங்கை::டாக்டர் ராஜத சேனாரட்ண:சண்டே ஒப்சர்வருக்கு வழங்கிய பேட்டி:-
கேள்வி: மீன்பிடித்துறை அமைச்சராக நீங்கள் பொறுப்பேற்ற பின்னர் அத்துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விளக்குவீர்களா?

பதில்: மீன் பிடிக்கைத்தொழில் தொடர்பில் முன்னுரிமை பெற வேண்டிய விஷயம் மீன் நுகர்வு மூலம் இந்நாட்டு மக்களின் போஷாக்கு குறையை, நிவர்த்தி செய்வதுதான். தற்போது நாட்டிலுள்ள 21 சதவீத குழந்தைகள் போஷாக்குக் குறைவுடன் காணப்படுகின்றனர். 2013ம் ஆண்டில் இந்த விகிதம் 12% ஆகக் குறையும் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

எனினும் போஷாக்கின்மையை அந்த 12 சத வீதத்திலும் குறைவானதாக ஆக்க வேண்டுமென்பது எமது இலக்காகும். நான் கடமையேற்ற போது தனிநபரின் மீன் நுகர்ச்சி 31 கிராமாக இருந்தது. 2013 இல் அந்நுகர்வை 60 கிராமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நுகர்வை 35 கிராமாக ஆக்க முடிந்தது. 2013 இல் எமது மீன் உற்பத்தி 685,000 தொன் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அவ்வாறு அமையும் போது தேவையான மீனை நுகர வாய்ப்புக் கிடைக்கும். புரதக் குறைபாடு காரணமாகவே 72 சதவீத மக்கள் போஷாக்கு குறைபாடுடன் காணப்படுகின்றனர். அநேகமாக நமது மக்கள் புரதம் பெற விலங்குகளில் தங்கியுள்ளனர். ஆகவே மீன் நுகர்வை அதிகரித்துப் புரதக் குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.

அடுத்து இத் தொழிலின் முதகெலும்பாக விளங்கும் மீனவரின் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும். மீனவர் நலன்கருதி வரியற்ற கைத்தொழிலாக மீன்பிடித் தொழில் ஆக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரங்கள் இனாமாக வழங்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதுடன் வட்டி குறைந்த இலகு கடன் வசதிகளையும் அளித்து வருகிறோம். அவர்களது கடனுக்கான வட்டியில் 4 சதவீதத்தை அரசு பெறுகின்றது. வட பகுதி மீனவருக்கு 4 சதவீத வட்டியை அரசு பொறுப்புடன் 25 சதவீத கடனையும் அரசே, மீளச் செலுத்துகிறது.

மீனவர் அனைவருக்கும் காப்புறுத்தித்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தைமாதம் தொடக்கம் காப்புறுதி செய்து ஒவ்வொரு மீனவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில் புரியும் போது தீய விளைவுகள் ஏற்படின் நிவாரணம் பெறமுடியும். 60 வயதை அவர்கள் எட்டும் போது 10 ஆயிரம் வரை பெறக் கூடிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து மீன்பிடிக் கைத்தொழிலில் நவீன தொழில் நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தி சட்டபூர்வமற்ற மீன்பிடி முறைகளை இனம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வடக்கே இழுவைப்படகுப் பாவனை கிழக்கிலே வெடிவைத்து மீன்பிடித்தல் தெற்கிலே அனுமதிக்கப்படாத மீன்பிடி முறைகள் உள்ளன. இவை கட்டுப்படுத்தப்படவுள்ளன.

புதிய மீன்பிடி முறைகளைக் கையாள நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்குக்கென 100 பெரும் படகுகள் தருவிக்கப்படவுள்ளன. கடலில் பலநாள் தங்கியிருந்து மீன்பிடிக்கும்பாரிய படகுச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மீன்பிடிப்படகுகளை ஆழ்கடலில் கண்காணிக்கக் கூடிய ஒருபடகுச் சேவை இருக்கும். கடல் எல்லை தாண்டுதல், திசைமாறி அலைதல், இயற்கை அனர்த்தங்களால் மீனவர் கஷ்டங்களை எதிர்நோக்குதல் போன்றவற்றுக்கு உதவுவதற்கு இக்கண்காணிப்புப் படகு பயன்படும். மீன்வளமுள்ள கடற் பிரதேசங்களை மீனவருக்குத் தெரியப்படுத்தவும் புயல், பெருமழை, காற்று சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டி அறிவித்து மீனவரைப் பாதுகாக்கவும் கண்காணிப்புப்படகு பயன்படுத்தப்படும்.

தங்கி மீன் பிடிக்கும் படகுகளுக்கான எரிபொருள் மற்றும் உபகரணங்கள் மீனவருக்கான உணவு மற்றும் தேவைகளை ஒரு தாய்ப்படகு கொண்டு சென்று விநியோகம் செய்யும். அத்துடன் தங்கிப்பிடிக்கப்பட்ட மீன்கள் தாய்ப்படகு மூலம் கரைக்கும் கொண்டு வர ஒழுங்கு மேற்கொள்ளப்படும்.

கேள்வி: சங்கு குளிப்பவர்களுக்கும் சுழியோடி மீனவர்களுக்கும், நடைமுறையிலுள்ள பாஸ் பத்திரம் பெறுதல் தொடர்பாக மன்னார் மீனவ சங்கங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அண்மையில் நடத்தின. இத்தகைய பாஸ் பெற்றுக் கொண்ட இந்திய மீனவர்களும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட வாய்ப்புண்டு என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: கடல் எல்லை தாண்டி திருட்டுத்தனமாக மீன்பிடிப்பது நீண்ட காலப் பிரச்சினை. கடந்த 30 ஆண்டுகளாக வடக்கில் இது நடைபெற்றது. யுத்த காலம் அவர்களுக்கு வசதியளித்தது. தற்போது யுத்தம் முடிந்து சமாதானம் தழைக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையிலும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களைத் தாக்கியும் தடுத்தும் துன்புறுத்துவது தொடர்கிறது. இலங்கை மீனவர் சிலரை இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் கதைக்கவும், இணக்கம் காணவும். சில என். ஜி ஓ. க்கள் கொண்டு சென்றன.

பேச்சுவார்த்தையில் இலங்கை எல்லை தாண்டி ஆண்டில் 70 நாட்கள் மீன் பிடிக்க இணக்கம் கண்டனர். பிரச்சினை இழுபடுவதற்கு இத்தகைய ஒப்பந்தமும் ஒரு காரணமாகும். இந்த ஒப்பந்தத்தை நான் நிராகரித்தேன். மீனவர்கள் தமது சொந்த வேலையைப் பார்க்க வேண்டும்.

அரசு மீனவப் பிரதிநிதிகளுடன் பேசி வேண்டியதைச் செய்யும் என்று கூறினேன். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்திய மீனவர்கள் இங்கு வருவதையும் நமது மீனவர்கள் இந்தியா போவதையும் நான் நிராகரித்து வந்துள்ளேன். இலங்கை மீனவர்கள் ஐவர் திசைமாறி இந்திய எல்லைக்குள் செல்ல நேர்த்தால் 5000 இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வறி திருட்டு வேலையில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். மீன் வரும் கோறல் பாறைகளைத் தகர்க்கின்றனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் இங்கு வந்தபோது எல்லை தாண்டி மீன் பிடிக்கும் முறைபற்றி, நடைமுறைபற்றி அதற்கான அமைச்சரான என்னுடன் மட்டுமே பேச வேண்டுமென ஜனாதிபதி அழுத்திக் கூறினார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரக் கூடாது என்பதில் நான் உறுதியான தீர்மானத்துடன் இருக்கின்றேன்.

இந்தியா எமது சிநேக நாடு. பயங்கரவாத யுத்தத்தின் போது நமக்குப் பாரிய உதவியளித்தது. மேற்கு நாடுகளின் பயமுறுத்தல்கள் நம்மைப் பாதிக்காமல் இந்தியா நமக்கு அருகிலிருந்து உதவி வருகிறது. நமது அண்டைநாடான இந்தியா மூலம் நாம் பல நன்மைகளை அடைந்து வருகிறோம். ஆனாலும் இந்த அத்துமீறல் விஷயம் கடந்த 30 ஆண்டுகள் வடபகுதி மீனவர்களைப் பாதித்து வந்த ஒன்று. இது வடபகுதி மக்களின் ஜீவனோபாயத்தோடு சம்பந்தப்பட்டது.

அடுத்த ஆண்டு ஜனவரி 13, 14ம் திகதிகளில் கூட்டுச் செயற்றிட்டக் கமிட்டி கூட இருக்கிறது. இந்திய கரையோர பாதுகாப்புத் தலைமை அதிகாரி அண்மையில் இது பற்றிப் பேசும் போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதும் ரோலர் பாவிப்பதும் சட்ட விரோதமானது என்றும் நிறுத்தப்பட வேண்டியது என்றும் தெரிவித்துள்ளார். எனவே மேற்படி செயற்றிட்ட மாநாட்டில் நமக்கு சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறலாம்.

நான் அமைச்சைப் பொறுப்பேற்றபோது 779 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 23 பேரே தடுப்பில் உள்ளனர். இரு வாரங்களுக்கு முன் மன்னார் சென்ற போது அத்துமீறும் இந்திய மீனவர் தொகை 35 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மன்னார் மீனவப் பிரதிநிதிகள் கூறினர். எனினும் இது முடிவுக்கு வரவேண்டும். சர்வதேச ரீதியான கடல் எல்லை தொடர்பாக உள்ள சர்வதேச சட்டத்தை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும்.

சங்கு குளிப்பவர்கள், சுழியோடி, மீன் பிடிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் தொடர்பாக மன்னாரிலுள்ள கடற்றொழில் உதவி ஆணையாளருக்கு நான் வேண்டிய விதிமுறைகளைக் கூறியுள்ளேன். அவர் அதைப் பின்பற்றுவார். கரையிலிருந்து 20 கிலோ மீற்றர் அப்பால் சென்றே சுழியோடித் தொழில் செய்ய வேண்டுமென மன்னார் கடற்றொழிலாளர்கள் கோரப்பட்டுள்ளனர். தென்பகுதி மீனவர்கள் வடபகுதிக்குத் தொழில் செய்யப்போவதை நான் தடை செய்துள்ளேன். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தேவையற்றவை.

கேள்வி: இலங்கையை ஆச்சரியமுள்ள ஆசிய நாடாக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் இலட்சியத்துக்குத் தடையாக உள்ள அம்சங்கள் எவை என்று கூறுவீர்களா?

பதில்: ஆம். ஜனாதிபதியின் பிரகடனம் சிறப்பானது. ஆசியாவின் அதிசயமான இலங்கையை மாற்றும் பாரிய பணிகளுக்கு அமைச்சர்களும் அரசில் அங்கம் வகிப்போரும் பொதுமக்களும் கூட ஒத்துழைப்பு நல்க வேண்டும். அமைச்சர்கள் தத்தம் இலாகாப் பணிகளைச் சிறப்பாகச்செய்து முடிக்க வேண்டும்.

சிங்கப்பூரை எவ்வாறு ஆசியாவின் அதிசய நகரமாக மாற்றினீர்கள் எனச் சிங்கப்பூர் பிரதமரைக் கேட்ட போது அவர் சொன்னார். தகைமையும் திறமையும் உள்ளவர்களைத் தேர்ந்து அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தியே வெற்றி கண்டோம் என்றார். தகைமையுள்ள அமைச்சர்கள் சிங்கப்பூரை மாற்றியது போல நாமும் செயல்படும் போது ஜனாதிபதியின் இலட்சியம் நிறைவேறும்.

ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் எமக்கும் உண்டு.

கேள்வி: ஜனாதிபதி கடற்றொழில் அமைச்சராக விருந்தபோது இலங்கையின் கடல் எல்லையை விஸ்தரிப்பதற்கான வேண்டுகோளை ஐ. நா.விடம் விடுத்தார். அக்கோரிக்கை ஐ.நாவின் பரிசீலனையில் உள்ளது. மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு அந்தக் கோரிக்கைக்குத் தடையாக இருக்குமா?

பதில்: இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு எதுவித பாதிப்பும் இல்லை. 2020ம் ஆண்டு வரை எமது நாட்டின் கருத்துக்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு உண்டு. எமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் காலக் கெடுவைக் குறைக்க நான் முயற்சித்து வருகிறேன்.

கேள்வி: எமது கடல் எல்லைக்குள் வெளியார் இழுவைப் படகு பாவித்துக் கடல் வளத்தை ஒழிப்பதைத் தடுக்க கடற்றொழில் இலாகா எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: புத்திக்குப் பொருந்தாத பாரம்பரிய மீன்பிடி முறைகளில் மாற்றம் வேண்டும். இழுவை வலைப் பாவனையை நான் தடை செய்துள்ளேன். இருந்தும் இந்திய மீனவர்கள் தொடருகின்றார்கள். அதனால் படையினரின் உதவியும் கடற்படையினர் கண்காணிப்பும் அவசியம் தேவைப்படுகின்றது. இதனால் ஏற்படும் பாரிய வள நஷ்டங்களைத் கருத்தில் கொண்டு அவர்கள் தடை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இழுவை வலைக்கான தடை உத்தரவு சரியான முறையில் அமுல் நடத்தப்படவில்லை.

அண்மையில் அத்துமீறிச் செயல்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களை விடுவிக்குமாறு மேலதிகாரிகள் பணித்ததாகக் கூறப்பட்டது. எமது கடல் வளத்தைச் சீரழித்து அழிக்கும் வியாபாரிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர நாட்டுக்கு ஏற்படும் பாரிய கடல் வள நஷ்டத்தைப் பற்றிப் பேசுவோர் இல்லை. வடக்குக் கிழக்கில் கடல்வள அழிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிப்பது பற்றிச் சிந்திப்பாரில்லை. எனவே இழுவை வலைப் பாவனையைக் கண்டிப்பாகத் தடைசெய்ய நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். கடற்படையின் உதவியுடன் இது நடைபெறும்.

கேள்வி: எமது கடல் எல்லைக்குள் வெளியார் இழுவைப்படகு பாவித்து கடல் வளத்தை அழிப்பதைத் தடுக்க கடற்றொழில் இலாகா எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: புத்திக்கு பொருந்தாத பாரம்பரிய மீன்பிடி முறைகளில் மாற்றம் வேண்டும். இழுவை வலைப் பாவனையை நாம் தடை செய்துள்ளோம். இருந்தும் இந்திய மீனவர்கள் தொடருகின்றார்கள். அதனால் படையினரின் உதவியும் கடற்படையின் கண்காணிப்பும் அவசியம் தேவைப்படுகின்றது. இதனால் ஏற்படும் பாரிய வள நஷ்டங்களைக் கருத்திற் கொண்டு அவர்கள் தடை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இழுவை வலைக்கான தடை உத்தரவு சரியான முறையில் அமுல் நடத்தப்படவில்லை.

அண்மையில் அத்துமீறிச் செயல்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களை விடுவிக்குமாறு மேலதிகாரிகள் பணித்ததாகக் கூறப்பட்டது. எமது கடல் வளத்தைச் சீரழித்து அழிக்கும் வியாபாரிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர நாட்டுக்கு ஏற்படும் பாரிய கடல்வளத்தைச் சீரழித்து அழிக்கும் வியாபாரிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர நாட்டுக்கு ஏற்படும் பாரிய கடல்வள நஷ்டத்தைப் பற்றிப் பேசுவோர் இல்லை.

கேள்வி: இந்திய வெளிவிவகாரத்துணை அமைச்சர் இந்திய பாராளுமன்றில் அண்மையில் பேசும் போது இலங்கைக் கடற்படை கடந்த 5 ஆண்டுகளிலும் 154 இந்திய மீனவர்களைக் கொன்றதாகத் தெரிவித்தார். இதில் உண்மை உண்டா?

பதில்: என்னைப் பொறுத்தவரை எல்லை மீறி மீன்பிடிக்கும் விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு எத்தனமாகவே நான் கருதுகின்றேன். உண்மையான தொகை யாருக்கும் தெரியாது என்பதே என் எண்ணம். கடற்படையால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள். அல்லது புலிகளால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

கடற்படையை விட புலிகள் வலுவுள்ள படகுகளையும் ஆயுதங்களையும் வைத்திருந்தார்கள். கடற்படை மீது எரிச்சலூட்டும் உட்கருத்துள்ள கதையாகவே இதனைக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்தவரை கடற்படையினர் கள்ளத்தனமாக எல்லை மீறியவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment