Sunday, December 11, 2011டெல்லி::இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் வில்லியம் பார்ன்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளது.
இந்தக் குழுவினருக்கும் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை விவகாரம் குறித்தும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட பலருடன் அமெரிக்க இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பதனை டெல்லிக்கான அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்த மறுத்துள்ளது.
No comments:
Post a Comment