Sunday, December 11, 2011இலங்கை::ஈழ கோரிக்கைகளுக்கு நிகரான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். என்று திவயின ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திய ஈழவாதத்தை எந்த வகையிலும் மீள தலைதூக்க விடக் கூடாது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த மக்களின் கலாசாரத்தையும், சமயத்தையும் இல்லாதொழித்த பிரபாகரனின் ஆவிகள் இன்னும் நாட்டில் உலாவுகின்றன.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
எனினும், அரசாங்கம் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த காரணத்தினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சமின்றி அரசியல் செய்யக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் தங்களது பங்களிப்பு முக்கியமானது என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நன்கு உணர்வார்கள். எனினும், அவர்களது அரசியல் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் முன்வைத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரம் உட்பட்ட மூன்று நிபந்தனைகளும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
ஈழ கோரிக்கைகளுக்கு நிகரான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.
வடக்கையும் தெற்கையும் இணைக்கக் கூடிய வகையிலான யோசனைத் திட்டங்களுக்கு பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பிரிவினைவாதத்தை தூண்டும் நிபந்தனைகளே விதிக்கின்றனர்.
தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லையா என திவயின ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வுத் ஒன்றை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தைப் போன்றே தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டுமென்று திவயின ஆசிரியர் தலையங்கத்தில் கோரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில வாழ்ந்து வரும் சில தமிழர்களுக்கும் அவர்களது அமைப்புக்களுக்கும் ஈழத்தை கைவிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment