Sunday, December 11, 2011

நடிகர் சங்கத்துக்கு 7 மாடி கட்டிடம் தடை கோரி ஐகோர்ட்டில் மனு மாநகராட்சிக்கு நோட்டீஸ்!

Sunday, December 11, 2011
சென்னை:: நடி கர் சங்கத்துக்கு புதிய 7 மாடி கட்டிடம் கட்டு வதற்கு தடைகோரி, உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் மாநகராட்சி, சிஎம்டிஏ உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தி.நகர் அபிபுல்லா ரோட்டை சேர்ந்த சுகு மாரன், அம்பிகா மேனன், மேத்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தி.நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, நடிகர் சங்கத்துக்கு 7 அடுக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. கட்டிடத்தின் அருகில் 3 பள்ளிகள் உள்ளன. கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அருகில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்கவில்லை. மேலும், சிஎம்டிஏ விதிமுறைகளுக்கு முரணாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
விதிகளின்படி கட்டிடத்தின் அருகில் நீள, அகல சாலைகளுக்கு இடம் ஒதுக்கவில்லை. எனவே, நடிகர் சங்கத்துக்கு அந்த இடத்தில் 7 மாடி கட்டிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜரா னார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிஎம்டிஏ, மாநகராட்சி, நடிகர் சங்கம், சத்யம் தியேட்டர் நிர்வாகம் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment