ஜே.வி.பி.கட்சியிலிருந்து பிளவடைந்துள்ள கிளர்ச்சிக் குழுவினர் முன்னாள் புலி போராளிகளை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது-சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது! 
Sunday, December 11, 2011
இலங்கை::ஜே.வி.பி கட்சியிலிருந்து பிளவடைந்துள்ள கிளர்ச்சிக் குழுவினர் முன்னாள் புலி போராளிகளை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளுக்காக பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
எட்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என்று இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கின் சிவில் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.
அத்துடன் முன்னாள் போராளிகளின் உதவியுடன் வடக்கிலிருந்து தெற்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்படலாம் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஜே வி பியின் கிளர்ச்சிக்குழு மற்றும் நாம் இலங்கையர் அமைப்பின் வடக்கு இணைப்பாளருமான லலிதகுமார் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Sunday, December 11, 2011இலங்கை::ஜே.வி.பி கட்சியிலிருந்து பிளவடைந்துள்ள கிளர்ச்சிக் குழுவினர் முன்னாள் புலி போராளிகளை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளுக்காக பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
எட்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என்று இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கின் சிவில் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.
அத்துடன் முன்னாள் போராளிகளின் உதவியுடன் வடக்கிலிருந்து தெற்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்படலாம் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஜே வி பியின் கிளர்ச்சிக்குழு மற்றும் நாம் இலங்கையர் அமைப்பின் வடக்கு இணைப்பாளருமான லலிதகுமார் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment