Wednesday,December,28,2011இலங்கை::வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் கோரிக்கையை இதனை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 26ம் திகதி ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து கோரியிருந்தார்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் வேறும் எந்தவொரு தரப்பினருடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் அமெரிக்க 300 இராணுவ முகாம்களை பேணி வருவதாகவும் இராணுவ முகாம்கள் பற்றி அரசியல்வாதிகள் அன்றி பாதுகாப்பு திணைக்களமே அங்கு தீர்மானம் எடுக்கின்றது என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment