Tuesday, December 27, 2011

பிரித்தானியா சுற்றுலாப்பயணியை சுட்டுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்!

Tuesday, December,27, 2011
இலங்கை::தங்காலை பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றினுள் பிரித்தானியா சுற்றுலாப்பயணியை சுட்டுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து ரி 56 துப்பாக்கி வித்தாரன்தெனிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றிரவு சரணடைந்த இரண்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் பிரேத பரிசோதனைகள் மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து சடலத்தை பிரித்தானியா உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment