Wednesday, December 14, 2011

இலங்கையில் புத்திஜீவிகளும் அச்சு ஊடகங்களும் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றுவதாக-விக்கிலீக்ஸ் தகவல்!

Wednesday,December,14,2011
இலங்கையில் புத்திஜீவிகளும் அச்சு ஊடகங்களும் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றுவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அகேமான அச்சு ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் சர்வதேச அரசியல் விவகாரங்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்ளகப் பிரச்சினைகளின் போது பக்கச்சார்பு தன்மை காணப்படுவதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸினால் அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பல புத்திஜீவிகள் சோவித் ஒன்றியத்தில் கல்வி பயின்றவர்கள் எனவும், அவர்கள் அதிகளவில் மார்க்சிச கொள்கைகளில் கூடுதல் அக்கறை காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அச்சு ஊடகங்கள், ஆங்கில மற்றும் ஏனைய மொழி ஊடகங்கள் அமெரிக்க எதிர் செய்திகளை அதிகம் பிரசூரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் மற்றும் ஈராக்கிற்கு எதிரான யுத்தம் போன்றன தொடர்பில் இலங்கை ஊடகங்கள் அமெரிக்க விரோத கொள்கைகளை பின்பற்றி வருகின்றன.

அமெரிக்காவிற்கு ஆதரவாக செயற்படுகின்றமை தொடர்பில் பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு எதிராகவும் ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment