Wednesday, December 14, 2011

நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள 13 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

Wednesday,December,14,2011
இலங்கை::13 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்கள் என குறிப்பிடப்படுகிறது.இதில் மூன்று பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செலிங்கொ குழும நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவிற்கு எதிராகவும் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத் தாள் அச்சிடல் உள்ளிட்ட பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment