Saturday, December 10, 2011இலங்கை:உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை களையும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான புதிய சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய அபிவிருத்தி பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
அபிவிருத்திப் பணிகளை சீரிய முறையில் மேற்கொள்வதற்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment