Saturday, December 10, 2011

3ம்-இணைப்பு- கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து 87 நோயாளிகள் பரிதாப பலி!

Saturday, December 10, 2011
கொல்கத்தா : கொல்கத்தா மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 87 நோயாளிகளும், 3 ஊழியர்களும் பலியானார்கள். பெரும்பாலானவர்கள் புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறி இறந்தனர். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தாகுரியா பகுதியில் உள்ளது அம்ரி மருத்துவமனை. தனியார் துறையில் நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. இதன் பிரதான கட்டிடத்தையொட்டி 2005ல் 7 மாடி அனெக்ஸ் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தரை தளத்தில் உள்ள மின்சார கட்டுப்பாடு அறையில் தீப்பிடித்தது. அங்கு எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள் இருந்ததால் தீ வேகமாகபரவியது. ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனால், மருத்துவ மனை யின் அனைத்து பகுதிகளும் ஒரே இணைப்பில் ஏர்கண் டிஷன் செய்யப்பட்டு இருந்ததால், ஏசி காற்று செல்லக்கூடிய பெரிய குழாய்கள் மூலம் எல்லா தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. ஊழியர்களால் அணைக்க முடியவில்லை. தீ எரிவதையும் புகை வரு வதையும் பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். ஆனால், காவலாளிகள் யாரையும் அனுமதிக்க மறுத்தனர். நிலைமை கை மீறி போவதை உணர்ந்த பிறகு ஊழியர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு படையினர் குறுகலான தெருக் களை கடந்து மருத்துவம னைக்கு வர இன்னும் நேர மானது. 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த 250 வீரர்கள் தீயை அணைக்க போராடினர். கட்டிடம் முழுவதும் ஏ.சி என்பதால் வெளிப்புறம் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. புகை வெளியேற முடியவில்லை. கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக தெரிந்தது. படுக்கையில் இருந்த நோயாளிகள் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவும் முடியாமல் ஓலமிட்டனர். உதவிக்காக உடன் தங்கியிருந்த உறவினர்கள் கும்மிருட்டில் புகை நடுவே வழி தெரியாமல் வெளியேற முடியாமல் தவித்தனர்.

புகையை சுவாசித்து நுரையீரல் அடைத்ததால் மூச்சு திணறி ஒவ்வொரு வராக மயங்கி விழுந்தனர். திசை தெரியாமலே தப்ப முயன்ற சிலர் தீயில் சிக்கி கருகினர்.
வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியிலும், உள்ளே இருப்பவர்களை மீட்கும் முயற்சியிலும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மயங்கி கிடந்தவர்களை கயிறு கட்டி மாடியில் இருந்து கீழே இறக்கினர். உயிரற்ற நோயாளிகளின் சடலங்களும் கயிறுகள் மூலம் கீழே இறக்கப்பட்டன.

மீட்கும்போது காயம் அடைந்தவர்கள், அம்ரி மருத்துவமனையின் வேறு கிளைகளுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தீ பிடித்தபோது கட்டிடத்தில் 160 நோயாளிகள் தங்கி இருந்தனர். அதில் 87 பேர் விபத்தில் பலியானார்கள். ஊழியர்கள் 3 பேரும் இறந்தனர். டூட்டியில் இருந்த டாக்டர்கள் பத்திரமாக தப்பிவிட்டனர். தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளும்,

எலும்பு முறிவு பிரிவில் இருந்த நோயாளிகளும் தான் மோசமாக பாதிக்கப்பட்டனர். எழுந்திருக்க முடியாமல் பெரும்பாலானவர்கள் பலியாகிவிட்ட னர். பல சடலங்கள் அடை யாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தன. முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம், மருத்துவமனை சார்பில் தலா ரூ.5 லட்சம் உதவி அறிவிக்கப்பட்டது.

கிடங்காக மாறிய கார் பார்க்கிங்

கொல்கத்தா : மருத்துவமனையின் அனெக்ஸ் கட்டிடத்துக்கு அனுமதி பெற்ற போது தரை தளத்தை கார் பார்க்கிங்காக பயன்படுத்தப் போவதாக வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தரை தளம் பார்க்கிங்காக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பொருட்களை வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வைத்துள்ளனர். மேலும், கட்டிடத்தின் மின்சார கட்டுப்பாட்டு அறையும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளது.

மேலும், மருத்துவமனையில் தீயணைப்பு கருவிகள் சரியாக பொருத்தப்படவில்லை. பொருத்தப்பட்டிருந்த கருவிகளும் சரியாக இயங்கவில்லை. அந்த கருவிகள் இயங்கும் நிலையில் இருந்திருந்தால், எளிதாக தீயை அணைத்திருக்கலாம் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கதிர்வீச்சு அபாயம் இல்லை

தீ விபத்து காரணமாக மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பிரிவில் இருந்து கதிர்வீச்சு கசிவு ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அந்த படையை சேர்ந்த 6 நிபுணர்கள் மருத்துவமனையின் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் அறையை நேற்று மாலை சோதனையிட்டனர். அப்போது, கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். இதனால் மக்கள் அஞ்ச வேண்டாம் என்று தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment