Saturday, December 10, 2011இலங்கை:தனமல்வில கஹகுருல்லன் பெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பிரதான காட்டில் 6 ஏக்கர் கஞ்சா தோட்டமும் 300 கிலோ கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சூரியவெவ உதவி பொலிஸ் அதிகாரி பெட்ரிக் சில்வாவுக்கு கிடைத்த தகவலையடுத்தே உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்கள் மேற்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சுற்றி வளைப்பு செய்ததில் 6 ஏக்கர் கஞ்சா தோட்டத்தையும், 300 கஞ்சா கிலோவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய் துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவ லில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பி டத்தக்கது.
No comments:
Post a Comment