Sunday, December 04, 2011தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான இறுதி சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது நல்லெண்ணத்துடன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைய முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்: ஆரோக்கியமான கலந்துரை யாடல்கள் மூலம் எத்தகைய பிரச்சினை களுக்கும் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:
பொருளாதாரமே மனித சமூகத்தின் அடிப்படையாகும். யுத்தம் முடிவுக்கு வந்தாலும் தீர்வு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. தீர்வு கிட்டும் என்று நம்புகிறோம்.
சிங்கள, முஸ்லிம் மக்களுடன் சகோதர வாஞ்சையுடன் நடந்து வருகிறேன். பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் உரிமையிலும் தமிழ் மக்களும் சம உரிமை பெற வேண்டும் அந்த பொறுப்பு எமக்குள்ளது.
தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தி வருகிறேன். தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரித்து வந்த சில அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வு மட்டுமே தேவை வேறெதுவும் தேவையில்லை என்றே கூறி வருகின்றன. இதுவும் அரசியலுக்காகவே என்றும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment