Monday, December 26, 2011

காணாமற்போன விமானப் படைவீரரின் சடலம் கண்டுபிடிப்பு!

Monday,December, 26,2011
இலங்கை:நாச்சத்தூவ வாவியில் தோணி கவிழ்ந்ததில் காணாமற்போன விமானப் படைவீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாச்சத்தூவ வாவியில் இருந்து இன்று முற்பகல் குறித்த விமானப் படைவீரரின் சடலம், கடற்படையின் சுழியோடிகளால் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி தயானந்த தெரிவித்தார்.

நண்பர்களுடன் நாச்சத்தூவ வாவிக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் இந்த விமானப்படை வீரர் அனர்த்தத்திற்கு உள்ளானார்.

28 வயதான இவர் அனுராதபுரம் விமானப் படைப்பிரிவின் தொலைத் தொடர்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment