Monday, December 26, 2011

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து (புலி) கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது!

Monday,December, 26,2011
இலங்கை:அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்க முடியாதென்றும் வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாதென தெரிவித்திருந்தார்.

இதேபோல் அமைச்சரவையின் பேச்சாளரான கெஹலிய றம்புக்வெல பொலிஸ் அதிகாரம் குறித்து பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிப்பது ஏன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அரசாங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுக்களை தொடர்வதா அல்லது பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தீர்மானமொன்றினை எடுக்கவுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு முன்னர் தமது நிலைப்பாட்டினை வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்குவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எம்மை இணைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. அச்றுத்தலை விடுத்தாவது எம்மை தெரிவுக்குழுவில் இணைப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது.

இவ்விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம் என ஜானதிபதி கூறுகின்றார். இதேபோல் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம் என்றும் அவர் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்வதில் பயன் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் இவ்விடயங்கள் தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டியது எமது பெரும் பொறுப்பாகும்.

இதற்கேற்றவகையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தின் பின்னர் இதனை மேற்கொள்வோம்.

இதனையடுத்து எதிர்வரும் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா என்பது குறித்து முடிவொன்றினை எடுக்கும். எதிர்வரும் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகளில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை தொடர்பில் உறுதியான முடிவொன்றினை நாம் மேற்கொள்வோம். என்றுள்ளது.

No comments:

Post a Comment