Thursday, December 8, 2011

இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்தி‌ரேலியா முழு ஆதரவு!

Thursday,December,08,2011
புதுடெல்லி: 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்தி‌ரேலியா முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக பத்தரிக்கையாளர்களை சந்தித்த அவர், இருநாடுகளுக்கிடையேயான உறவு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிற்கு யுரேனியம் தர ஆஸ்தி‌ரேலியா வந்துள்ளதே இதற்கு சாட்சியாகும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில், இருநாட்டு கடற்படைகளும் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment