Thursday, December 8, 2011

யாழ்-குடாநாட்டினில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த தம்மிடம் போதிய காவற்துறையினர் இல்லை-யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர்

Thursday,December,08,2011
இலங்கை:யாழ்.குடாநாட்டினில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த தம்மிடம் போதிய காவற்துறையினர் இல்லாதிருப்பதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்; நேற்று யாழ் .வணிகர் கழகத்தினில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டினில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பினில் கலந்து கொண்ட உதவி சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் அபேயசிங்க பண்டார இச்செய்தியை எடுத்து வந்து தெரிவித்தார்.யாழ் குடாநாட்டினில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பினில் நேற்று யாழ் .வணிகர் கழகத்தினில் உயர் மட்ட மாநாடொன்று இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வணிகர் சங்க பிரதிநிதிகள் இம்மாநாட்டினில் கலந்து கொண்டனர். யாழ்.தலைமை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சிகாரோ உதவி சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் அபேயசிங்க பண்டார ஆகியோர் காவற்துறை தரப்பினில் கலந்து கொண்டனர். அவ்வேளையிலேயே குடாநாட்டினில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த தம்மிடம் போதிய காவற்துறையினர் இல்லாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை கருத்தினில் கொண்டு வர்த்தக சமூகத்தையுள்ளடக்கி பாதுகாப்பு குழுவொன்றை அமைக்கும் ஆலோசனை காவற்துறை தரப்பினால் முன்வைக்கப்பட்டது.அவர்களுக்கான பாதுகாப்பு பயற்சியை தாம் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து யாழ்நகர் மற்றும் அதன் புறநகர் பகுதி வர்த்தக நிலையங்களை பாதுகாக்கும் வகையினில் நடமாடும் பாதுகாப்பு ஊழியர்கள் பிரிவொன்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நகரப்பகுதி மற்றும் திருநெல்வேலி பகுதிகளிலும் வடமராட்சியின் பருத்தித்துறையிலும் தொடர்ச்சியாக பல வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அண்மை நாட்களில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment