Thursday, December 8, 2011

2ஜி விவகாரம் : சாட்சியாக மாற சுவாமிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Thursday,December,08,2011
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க சுப்ரமணிய சாமிக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி, வரும் 17 ம் சுப்பிரமணி சாமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தன் தன் வசம் உள்ள ஆதாரங்களை முழுமையாக நீதிமன்றத்தில் அளிக்கவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி சாட்சியம் அளித்த பிறகு, சிபிஐ இணை இயக்குனர் மற்றும் மத்திய நிதித்துறை இணை இயக்குனர் ஆகியோரை விசாரணைக்கு அழைப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதி ஓ.பி சைனி கூறினார். 2 ஜி ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரிய சுப்பிரமணிய சுவாமியின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment