Thursday,December,08,2011லண்டன் : பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவி, நண்பர்கள் மூலம் சீக்கிய வாலிபரை உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து லண்டனில் வசித்தவர் ககன்தீப் சிங், வயது 21. சமீபத்தில்தான் Ôசீக்கியர் டிவிÕ தொடங்கினார். பெரும் பணக்காரரான இவருக்கு, லண்டனில் மருத்துவம் படிக்கும் முண்டில் மகில் என்ற பெண் மீது காதல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலை முண்டிலிடம் ககன்தீப் கூறியுள்ளார். அதை அவர் ஏற்கவில்லை. அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முண்டில், தனது நண்பர் ஒருவர் மூலம் கொலை திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் ககன்தீப் சிங்கை தனது வீட்டுக்கு முண்டில் அழைத்துள்ளார். அழகிய கரடி பொம்மை மற்றும் பூக்களுடன் ஆசையுடன் முண்டில் வீட்டுக்கு சென்றார். அங்கு படுக்கை அறைக்குள் சென்ற போது, முண்டிலின் காதலன் ஹர்விந்தர் ஷோகர் என்ற வாலிபரும், கூலிப்படையை சேர்ந்த டேரன் பீட்டர் என்பவரும் இருந்தனர். இருவரும் சேர்ந்து ககன்தீப்பை அடித்து உதைத்தனர். தன்னை விட்டுவிடும்படி அவர்களிடம் ககன்தீப் கெஞ்சி கதறியுள்ளார். எனினும், முண்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மயக்கம் அடைந்து விழுந்த ககன்தீப்பை மூட்டை கட்டி அவர் வந்த மெர்சிடஸ் காரில் போட்டுள்ளனர். பின்னர் காரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்றுள்ளனர். இந்த கொலை தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்த போது, அரசு தரப்பு வக்கீல் ஆதாரங்களை சமர்ப்பித்து முண்டில் மற்றும் 2 பேருக்கும் கடும் தண்டனை வழங்கும்படி வாதாடினார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment