Thursday,December 29, 2011இலங்கை மன்னார் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு கண்டறியப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் வேலைகள் ஜனவரிமாதம் முதல் ஆரம்பமாகிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவினர் இன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் குழுவினர் புறப்பட்டுச் செல்லும் அதேவேளை, குழாய் பொருத்தும் வேலைகளுக்காக மற்றுமொரு குழுவினர் இன்று இலங்கை வருகின்றனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் மன்னார் கடற் படுகையில் எண்ணெய் ஆய்வு வேலைகள் ஆரம்பமாகின. இந்தியாவின் கெய்ன் நிறுவனம் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தது. மன்னாரிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் ஆழ்கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
எண்ணெய் ஆய்வுக்காக ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட சிக்கியூ எண்ணெய் ஆய்வுக் கப்பலில் அதிகளவிவு ஜப்பானியர்களே கடமையாற்றியிருந்தனர்.
இதேவேளை, மன்னார் வளைகுடா கடற்படுகையில் மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் அகழ்வுப் பணிகளின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந் திருப்பதாக எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மூன்று கிணறுகளை அகழ்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு கிணறுகளில் எரிவாயு கண்டுபிடிப்பப்பட்ட நிலையில், மூன்றா வது கிணறு அகழ்வின்போது அக்கிணற்றில் எதுவித வாயுவும் இல்லையென்பது டிசம்பர் 14ஆம் திகதி கண்டறியப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்தர சர்வதேச மட்டங்களுக்கமைய பாதுகாப்பான முறையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமான முறையில் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதால் இரண்டாம் கண்டப் பணிகளையும் தமக்கு வழங்க இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் கெய்ன் லங்கா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே முதலாம் கட்டப் பணிகளை வெற்றிகர மாகப் பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள எண்ணெய் வள அபிவிருத்தி செயலகத்தின் கண்காணிப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு வேலைகள் நடைபெற்றன. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டிருந்தன.
ஆய்வுகளுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் குழுக்களுக்கு தேவையான வசதி களை செய்துகொடுப்பதற்கு இலங்கை விமானப்படையினரும், குடிவரவு குடிய கல்வுத் திணைக்களமும் மிகவும்
அக்கறையுடன் செயற்பட்டன. ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஹெலிக்கொப்டர்களில் விமானப் படையினர் சுமார் 200 தடவைகளுக்கு மேல் ஏற்றியிறக்கியிருந்தனர். இரத்மலானை விமானப்படைத் தளத்திலிருந்து இந்த ஹெலிக்கொப்டர்கள் இயங்கியிருந்தன.
எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளுக்கென மட்டுமேவரும் வெளிநாட்டினருக்கென இரத்மலானை விமான நிலையத்தில் தனியான குடிவரவு குடியகல்வுத் திணை க்கள கருமபீடம் திறக்கப்பட்டது. குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேராவின் ஆலோசனைக்கு அமைய பிரதிக் கட்டுப்பாட்டாளர் (இறங்குதுறை) சுனில் ராஜபக்ஷ, உதவி கட்டுப்பாட்டாளர் சுனில் குணசேகர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட கருமபீடம் இயங்கியது. வெளிநாட்டு ஆய்வாளர்கள் இலங்கைக்கு வந்ததன் ஊடாக வெளிநாட்டு செலாவணியாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்குப் பல மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்தது.
No comments:
Post a Comment