Thursday, December 29, 2011

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

Thursday,December 29, 2011
இலங்கை::தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பிய+ம் பெரேரா, மன்றத்தின் பணிப்பாளர் அஜித் நாரங்கல மற்றும் உதவி;ப் பணிப்பாளர்கள் , தேசிய இளைஞர் சேவைகள் அதிகாரிகள் ,இளைஞர் சேவைகள் சம்மேளண உறுப்பினர்கள் ,இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட நடனம், ஓவியப்போட்டிகள், மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கிவைக்கப்பட்டது

இதேவேளை இந்நிகழ்வில் விசேட சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றிமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் யுவதிகளின் நடன நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

No comments:

Post a Comment