Wednesday, December 28, 2011

மேற்குலக நாடுகள் விருப்பத்திற்கு அமைய செயல்பட போவதில்லை: மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகளே இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்-மஹிந்த ராஜபக்ச!

Wednesday,December,28,2011
இலங்கை::மேற்குலக நாடுகள் கூறும் வகையில் தாம் ஒருபோதும் நடந்துகொள்ள போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

டெக்கன் குரோனிக்கல் என்ற இந்திய நாளேட்டிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகளே இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இந்த நிலையில் மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் இலங்கை தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்பது தொடர்பில் மௌனம் சாதிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர்.

மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவிலும் அதையே செய்தனர்.
அவர்களே இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர்.

இதனிடையே இலங்கையில் ஓர் நிலையான அரசியல் தீர்வு குறித்த அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. எனினும்; அது பரந்துபட்ட அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வுக்காக அரசாங்கம் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாண சபைகளையும் நிறுவியுள்ளது.

இதனிடையே, சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலமே தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நாடாளுமன்றத் தெரிவுக்குழு இதற்கெனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துரதிஸ்டவசமாக தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை.

அவர்கள் இன்னமும் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே இருப்பதாகவும் அவர்களின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவையாக உள்ளதாகவும்; ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment