Tuesday, December 13, 2011

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி!

Tuesday, December 13, 2011
மும்பை : மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு பிரசாரம் காங்கிரஸ் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மகாராஷ்டிராவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 80 உள்ளாட்சிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜ, சிவசேனா கூட்டணி வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு பிரசாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மகாராஷ்டிராவில் தான் அன்னாவின் சொந்த ஊர் உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அன்னா தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment