Tuesday, December 13, 2011

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் முதல் ராணுவ தளம்!

Tuesday, December 13, 2011
பெய்ஜிங் : இந்திய பெருங்கடல் பகுதியில் செஷல்ஸ் தீவில் ராணுவ தளத்தை சீனா அமைக்கிறது. வெளிநாட்டில் சீனா ஏற்படுத்தும் முதலாவது ராணுவ தளம் இது. பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி அவற்றின் கடல் எல்லைக்குள் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை அமைப்பது வழக்கம். சீனா இதுவரை வெளிநாடுகளில் ராணுவ தளத்தை அமைத்ததில்லை. சமீபத்தில் அது இந்திய கடல் பகுதியில் கச்சா பாலிமெட்டாலிக் சல்பைட் கண்டுபிடிப்புக்காக ஐ.நா. ஆதரவு பெற்ற சர்வதேச கடல்படுகை ஆணையத்திடம் ஒப்பந்தம் செய்தது.

15 ஆண்டு கால ஒப்பந்தப்படி இந்திய பெருங்கடலில் கச்சா பாலிமெட்டாலிக் சல்பைல் சேர்க்கையை சேகரிக்கும் பணியில் சீனா ஈடுபடுகிறது. இந்த நிலையில், செஷல்ஸ் தீவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, செஷல்ஸ் தீவில் தனது ராணுவ தளத்தை அமைக்கிறது. வெளிநாட்டில் சீனா அமைக்கும் முதலாவது ராணுவ தளம் இது. அங்கு ராணுவ தளவாட சப்ளை, ஓய்வு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்த உள்ளது. மேலும், அங்கு போர் விமானங்களை ஏந்தி செல்லக் கூடிய போர்க் கப்பலை சீனா நிறுத்தும் என்று தெரிகிறது. இது தெற்காசிய பகுதியில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஆசிய அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment