Sunday, December 4, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு!

Sunday, December 04, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.வெள்ளிக்கிழமை சிகை அலங்கார நியைத்திற்க்கு அருகாமையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி ரி- .56 ரக துப்பாக்கி – 01, கைக்குண்டுகள் 02, ரவைக்கூடுகள 04, துப்பாக்கி ரவைகள் - 120 போன்றனவே இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசத்தில் அவர்களால் இவை இப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment