Wednesday,December,14,2011இலங்கை::மன்னார்-வெட்டியான்முறிப்பு கிராமத்திற்குச் செல்லும் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வலய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்கொல்லி குண்டுகள் - 108 மற்றும் பச்சை நிற தமிழர் கைக்குண்டு - 01 என்பன கைபற்றப்பட்டதோடு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிர்கொல்லி குண்டுகள் -25, தமிழர் கைக்குண்டு - 02 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment