Wednesday, December 14, 2011

கனடாவில் இயங்கி வந்த தமிழ் நிறுவனத்தின் உரிமம் ரத்து!

Wednesday,December,14,2011
கனடாவில் இயங்கி வந்த தமிழ் நிறுவனம் ஒன்றின் உரிமத்தை, அந்த நாட்டு அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

புலிகளுக்கு குறித்த நிறுவனம் நிதி வழங்கியது என்று குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் அகதி புனர்வாழ்வுக்கான கனேடிய நிறுவனம் என்ற இந்த அமைப்பு, சுமார் 7 லட்சம் டொலர்களை, கனடாவுக்கு வெளியில் இயங்கும், தகுதி பெறாத நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பு டி.ஆர்.ஓ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு ஒழுங்கமைப்புக்காக, 2005 ஆம் ஆண்டு மே மாதம், 6 லட்சத்து 20 ஆயிரம் டொலர்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment