Saturday, December 24, 2011இலங்கை::ஜனவரி மாதம் முதலாம் திகதி, முறையான செயற்பாடுகளை மீறி, ஜே வி பி மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக, அதன் கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
அதன் இணைப்பாளர் சமீர கொஸ்வத்த கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாடு, ஜே வி பியின் சில தலைவர்கள் தங்களின் பலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார்.
ஜே வி பியின் முக்கிய மாநாடு ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் ஹம்பாந்தொட்டை, திஸ்ஸமஹாரமவில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தற்போது உறுப்பினர்களை தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இந்த மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன், புதிய மத்திய செயற்குழுவுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment