Saturday, December 24, 2011

ஆயுத விற்பனை: ரஷ்யாவிற்கு 2-வது இடம்!

Saturday, December 24, 2011
மாஸ்கோ: உலக அளவில் ஆயுத விற்பனையில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளாதாக உலக ஆயுத வர்த்தக மையத்தின் தலைவர் கோரோட்சென்‌‌கோ தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு ரஷ்யா ஆயுதங்களை விற்பனை செய்ததன் மூலம் 11.29 பில்லியன் டாலரை பெற்றுள்ளது.இது சர்வதேச அளவில் 16.1 சதவீதமாகும். வரும் 2012-ம் ஆண்டில் 17.3 சுதவீதமாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அ‌தேசமயம் அமெரிக்கா 28.76 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இது 40 சதவீத அளவாகும். இந்த இரு நாடுகளுக்‌கு அடுத்த படியாக பிரான்ஸ் , ஜெர்மனி ,பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், ஸ்பெயின், சுவீடன், சீனா, ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. அதேபோல் ரஷ்யா100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களைஏற்றுமதி செயதுவருகிறது. அவைகளில் இந்தியா அல்ஜீரியா, சீனா, வெனின்சுலா மலேசியா, சிரியா, வியட்நாம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை

No comments:

Post a Comment