Tuesday, December 13, 2011இலங்கை:யாழ்நகரின் குருநகர் பகுதியில் சின்னக்கடை வர்த்தக நிலையப் பகுதியினில் முஸ்லீம் வர்த்தகரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனித்திருந்த இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. அப்துல் ஜப்பார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சியில் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு!
வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தினில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அடை மழை பெய்து கொண்டிருந்த வேளை வேகமாக பயணித்துக்கொணடிருந்த பிக்கப் வாகனமொன்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. யாழ்-பருத்தித்துறை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இவ்வாகனம் அரச அலுவலகமொன்றின் பயன்பாட்டினில் உள்ளது.
இவ்விபத்து சம்பவத்தினில் துன்னாலையை சேர்ந்த கணேசமூர்த்தி பார்த்தீபன் (வயது 22) செல்வவிநாயகம் கோபிநாத் (வயது 23) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களது நண்பரான அம்பிகைபாலன் செந்தூரன் (வயது 27) படுகாயமடைந்துள்ளார்.வேகமாக பயணித்துக்கொண்டிருந்த வேளை வாகனத்தின் ரயரொன்று வெடித்து சிதறியமையடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியள்ளது.
No comments:
Post a Comment