Thursday, December 29, 2011

சென்னையில் நாளை அதிமுக பொதுக் குழு கூடுகிறது!

Thursday,December 29, 2011
சென்னை: அதிமுக பொதுக் குழு சென்னையில் நாளை கூடுகிறது. அதில் சசிகலா நீக்கம், கட்சியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக் குழு கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மதுரவாயல் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அவைத் தலைவர் மதுசூதனன் முன்னிலையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும்படி 200 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 2500 பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு, கூடங்குளம், மீனவர் பாதுகாப்பு, லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என 17 பேர் இதுவரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அதுகுறித்து முதல்வர் விரிவாக பேசுவார் என்றும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது சாட்டையை சுழற்றுவார் என்றும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு நிலவுகிறது.

கட்சியின் கட்டுக்கோப்புக்கு குந்தகம் நேராதவகையில், ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தருவது என்றும், அவரது தலைமையின் கீழ் நல்லாட்சிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment