Thursday, December 29, 2011

புலிகள் இயக்கத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீட்பு!

Thursday,December 29, 2011
இலங்கை::புலிகள் இயக்கத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்கள் சில முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - இரனபளை - ஆனந்தபுரம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

இதன்படி, 7.62 குண்டு - 320, 12.7 ரவை - 14, 81 மோட்டார் புகைக்குண்டு - 13, ஆர்.ஜீ.பி.ரவை - 04, GPMG ரவை - 30, 120 மோட்டார் ரவை - 07, 8 கிராம் குண்டு - 01, LTTE தயாரிப்பு குண்டு - 16, 81 மோட்டார் பியுஸ் - 49, குண்டு பியுஸ் - 18, 60 மோட்டார் குண்டு - 09, 120 மோட்டார் குண்டு - 02, உயிர்கொல்லி குண்டு - 06, 82 மோட்டார் குண்டு - 15, 10 கி.கிராம் குண்டு - 01 மற்றும் 82 மோட்டார் ரவை - 02 என்பன மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் - பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மன்னார் பொலிஸாரால் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

mm 81 மோட்டார் குண்டு - 02, mm 122 டாசிங் குண்டு - 01, mm 60 மோட்டார் குண்டு - 02, RPG ரவை - 01, K4-100 கைக்குண்டு - 01, டெப்பிங் மெலன் ஜம்பிங் கைக்குண்டு - 01 மற்றும் கைக்குண்டு - 01 என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment