Thursday, December 29, 2011

இலங்கையின் தேயிலை உற்பத்தியை பாதித்த காலநிலை!

Thursday,December 29, 2011
இலங்கை::இலங்கை தேயிலையின் உற்பத்தி செய்யப்பட்ட அளவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் முதல் பதினொரு மாதங்களில் மொத்தமாக 2.4 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தமாக 276.15 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் மொத்தமாக 269.89 மில்லியன் கிலோ என 2.26 சதவீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 27.88 மில்லியன் கிலோ தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 23.69 மில்லியன் கிலோ என 15 சதவீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வீழ்ச்சிக்கு தேயிலை உற்பத்தியில் காணப்பட்ட பாதகமான கால நிலையே காரணம் என இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் எச்.டி. ஹேமரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment