Saturday, December 24, 2011

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பேய்து வரும் கடும் மழையின் காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன!

Saturday, December 24, 2011
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பேய்து வரும் கடும் மழையின் காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டை அண்மித்த கடற்கரை பகுதிகளில் நிலவும் காலநிலை மாற்றத்தால் நாட்டின் கடற்கரை மற்றும் ஏனைய பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நேற்று இரவு தொடக்கம் கடும் மழை பேய்து வருகிறது.நீர் மட்டம் அதிகரித்ததால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன...


இத் தொடர்ச்சியான மழையினால் காத்தான்குடி மற்றும் ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் நிரம்பிக்கானப்படுவதாக தெறிவிக்கப்படுகிறது.

இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேரி பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது..

தங்கவைக்கப்பட்ட இடங்களின் மக்கள் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.

No comments:

Post a Comment