Saturday, December 24, 2011

முல்லை பெரியாறு விவகாரம் : கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!.

Saturday, December 24, 2011
கோவை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் எழுந்த சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கோவை-பாலக்காடு இடையேயான போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. அணை விவகாரத்தால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் வாகனங்கள் தாக்கப்பட்டதையடுத்து இருதரப்பிலும், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கோவையில் இருந்து கேரளாவின் பாலக்காடு பகுதிக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், வாளையாறிலேயே நிறுத்தப்பட்டன.

தற்போது அமைதி நிலவுவதை அடுத்து, இன்று காலை 9 மணி முதல் இருமாநில எல்லையைக் கடந்து, அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு பேருந்தின் முன்னும் பின்னுமாக 2 போலீஸ் வாகனங்கள் செல்கின்றன. இதேபோல கேரள பகுதியில் இருந்தும் வாகனங்கள் வாளையாறு வழியாக கோவைக்கு வரத் தொடங்கியிருக்கின்றன.

No comments:

Post a Comment